பால் தாக்கரே காலமானார்
FILE
86 வயதான பால் தாக்கரே கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சில தினங்களாக மோசமடந்து வந்தது.
அவருக்கு மூச்சு பிரச்சனை மற்றும் மஞ்சள் காமாளை அறிகுறிகள் இருந்து வந்தது. சுவாசிக்க சிரமப்பட்டு வந்த அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பால்தாக்ரே உயிர் பிரிந்தது.
பால்தாக்ரே மறைவையடுத்து மும்பை நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பால்தாக்கரேவின் ஆதரவாளர்கள் அவரது இல்லம் இருக்கும் மட்டோஷ்ரீயில் குவிந்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் தாக்ரே இல்லத்தில் குவிந்துள்ளதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பால்தாக்ரேவின் இறுதி சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு பால்தாக்ரேவின் இறுதி ஊர்வலம் புறப்படும் என்றும், நாளை பிற்பகல் 3 மணிக்கு பால்தாக்ரேவின் உடல் தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
