தரைதட்டிய சரத் பவார் கப்பல் பற்றிய திடுக் தகவல்கள்
FILE
விசாரணையின் போது சென்னை துறைமுக அதிகாரிகள் எந்த வித உதவியையும் செய்ய முன் வரவில்லை என்பது தெரியவந்தது.
கப்பல் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அந்தகப்பல் பலவீனமான இருப்பது கடந்த ஜீலை மாதமே தெரியவந்திருக்கிறது.
அந்த கப்பலின் எஞ்சின் அறைகள் சேதமடைந்துள்ளதாகவும், சிக்னல் கட்டுப்பாட்டு அறை வேலை செய்யவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. என்ஜினை சுற்றிலும் எரிபொருள் கசிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த கப்பலின் மோசமான பராமரிப்பே இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதீபா காவேரி விபத்து குறித்து விசாரித்துவரும் சென்னை போலீசாருக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.
நீலம் புயலின் போது பிரதீபா காவேரிக்கும், சென்னை துறைமுகத்திற்கும், கடலோர காவல் படைக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தரை தட்டி நிற்கும் பிரதீபா காவேரி கப்பலை மீட்கும் பணி நாளை தொடங்கவிருக்கிறது. கடலுக்குள் இழுக்கும் பணிக்காக மாளவிகா இழுவை கப்பல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது.
