தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் எர்ரன் நாயுடு விபத்தில் பலி
தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் எர்ரன் நாயுடு கார் விபத்தில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேச கட்சியில் முன்னணி தலைவராக இருந்தவர்களில் ஒருவர் எர்ரன் நாயுடு. கட்சி தலைவருக்கு பிறகு முக்கியமான தலைவராக இருந்த எர்ரன் நாயுடு, மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எர்ரன் நாயுடு, தொடர்ந்து 1998, 1999, 2004 எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009இல் நடந்த எம்.பி. தேர்தலில் எர்ரன் நாயுடு தோல்வி அடைந்தார். இதனால் மாநில கட்சிப் பணியில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே இன்று காலை 2 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் எர்ரன் நாயுடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எர்ரன் நாயுடு மறைவையொட்டி தெலுங்கு தேச கட்சியின் கொடி கம்பம் அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
எர்ரன் நாயுடு உடல் தகனம் அவரது சொந்த ஊரான நிம்மடா கிராமத்தில் நடக்கிறது.