Dgca Suspends Kingfisher's Flying License | கிங்பிஷர் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு
ஊழியர்களுக்கு சம்பளம் தொகை கொடுக்காத நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் ரத்து செய்துள்ளது.
நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் கிங்பிஷர் நிறுவன விமான சேவை முற்றிலும் முடங்கியது.
இந்த நிலையில் நிறுவனத்தின் உறுதித் தன்மையை நிரூபிக்க அக்டோபர் 20ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. மல்லையா சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது.
இதனிடையே, அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரு விமானத்தைக் கூட இயக்க முடியாமல் இருக்கும் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு விமானப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் போதுமான நிதிநிலையை நிரூபிக்கத் தவறியதால், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை விமானப் போக்குவரத்துத் துறை இன்று ரத்து செய்துள்ளது.