1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
  6. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல்!

Govt. Approves 51% fdi in Retail Sector | சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல்!

சில்லரை வர்த்தகம்
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது இந்த முடிவு எட்டப்பட்டது.

பல்பொருள் அங்காடிகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் உள்நாட்டு விமான போக்குவரத்தில் வெளிநாட்டு முதலீட்டுக்கும் இக்கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய நிறுவனங்களில் 49 சதவீதம் வரை அன்னிய முதலீடு செய்ய முடியும்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்க்கட்சிகள் மற்றம் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய மக்கள் விரோத கொள்கைகளுக்கென்றே பிறப்பெடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற முடிவில் செயல்படுவது போல் தெரிகிறது.

அதற்குள் நாட்டைக் கூறுபோட்டு விற்றுவிட்டால் பின்னால் வருபவர்களும் ஒன்றும் செய்து விட முடியாது. பலதரப்பட்ட மக்களும் இந்த நாட்டில் பிழைத்து விடக்கூடாது. மாறாக அயல்நாட்டு வர்த்தகர்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட்கள் இந்தியாவில் விற்றுக் கொழுக்கவேண்டும் இந்த ரீதியில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் உரிமையை நிறுவனங்களுக்கே விட்டு விட வேண்டியது. அனைத்தின் மீதான அரசின் மக்கள் நலக் கட்டுப்பாடுகளையும் தியாகம் செய்து தனி முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மொத்தத்தையும் ஒப்படைத்து விட்டால் இந்த நாடாளுமன்றம், ராணுவம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு 'பஜனை' செய்ய மட்டுமே முடியும் என்று தெரிகிறது!
About Writer
Webdunia