1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பிரமோஸ்
இந்திய விஞ்ஞானிகள் பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கி உள்ளனர். இந்த ஏவுகணையை சோதித்து பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதற்காக ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறுவப்பட்டிருந்தது.

இன்று காலை பிரமோஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் சென்று நிர்ண யிக்கப்பட்ட இலக்கை கச்சிதமாக தாக்கியது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தியாவில் சமீபகாலமாக நடத்தப்படும் ஏவுகணை சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது.