Artist MF Husain passes away in London | பிரபல ஓவியர் எம்.எஃப் ஹூசைன் காலமானார்
பிரபல ஓவியர் ம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார்.
96 வயதாகும் ஹூசைன், சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
லண்டனில் உள்ள ராயல் பிராம்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் மரணமடைந்தார்.
வித்தியாசமான ஓவியங்களை, குறிப்பாக இந்துக் கடவுள் உருவங்களை நிர்வாணமாக வரைந்து சர்ச்சையில் சிக்கிய ஹூசைன்,இந்து அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார்.
மேலும் பாரத மாதாவின் படத்தையும் நிர்வாணமாக வரைந்தது பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்து அமைப்பினர் ஹூசைனுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை திரும்பப் பெற்றார். பின்னர் மன்னிப்பும் கோரினார்.
இருப்பினும் அவர் வரைந்த சர்ச்சைக்குரிய ஓவியத்திற்காக இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளும், கொலைமிரட்டல்களும் அதிகரித்ததால் 2006-ல் நாட்டைவிட்டு வெளியேறினார்.
2010 ஆம் ஆண்டு அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்கப்பட்டது.அதை ஏற்றுக்கொண்டார்.
பத்மஸ்ரீ விருது,பத்ம பூஷண் விருது, பத்ம விபூஷண் விருதுகளை பெற்ற ஹூசைன், 1986-ல் மாநிலங்களவை எம்.பி.யாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.