1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
  6. ரவீந்திரநாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது: மன்மோகன் அறிவிப்பு

International award to be instituted in Tagore`s name: PM | ரவீந்திரநாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது: மன்மோகன் அறிவிப்பு

ரவீந்திரநாத் தாகூர்
நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர்,உலகில் சகோதரத்துவம் மேம்பட பாடுபட்டவர்களுக்கு நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பெயரில் சர்வதேச விருது வழங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றும்,இதற்கான தேர்வுக்குழு தனது தலைமையில் விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல் விருது 150 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் வழங்கப்படும் என்று கூறிய அவர்,தாகூரின் படைப்புகளை மத்திய கலாச்சாரத் துறை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடும் என்றும், தாகூரின் ஓவியங்கள் டிஜிட்டலில் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
About Writer
Webdunia