1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
  6. ஒரிசா இனி ஒடிசா: பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல்

Orissa gets a new name: Parliament nod to Odisha | ஒரிசா இனி ஒடிசா: பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல்

ஒரிசா
ஒரிசா மாநிலத்தை ஒடிசா என்றும், ஒரியா மொழியை ஒடிசா மொழி என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரிசா மாநிலத்தை ஒடிசா என பெயர் மாற்றம் செய்யக்கோரி நாடாளுமன்ற அரசியலமைப்பு சட்டம் 113 ஆவது பிரிவின் கீழ் மாசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலியுறுத்தி வந்தனர் .

மக்களவையில் ஏற்கனவே இதற்கு ஒப்புதல் தரப்பட்டுவிட்ட நிலையில் மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் இதற்கு ஆதரவாக ஒட்டளித்தனர்.

இதன் மூலம் இரண்டில் ஒரு பங்கு பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேறியது.
About Writer
Webdunia