1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
  6. மத்திய பட்ஜெட்: அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet approves Budget 2009-10 | மத்திய பட்ஜெட்: அமைச்சரவை ஒப்புதல்

பட்ஜெட்
மத்திய அரசின் 2009-10ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது.

வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அமைச்சரவை கூடி அதற்கு ஒப்புதல் அளிப்பது நடைமுறையில் உள்ளது.

அதன்படி இன்று காலை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

About Writer
Webdunia