1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

துருக்கி பிரதமர் புதுடெல்லி வருகை!

துருக்கி பிரதமர் ஆர்டி எர்டோகன் இந்தியா
துருக்கி நாட்டின் பிரதமர் ஆர்.டி. எர்டோகன் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று புதுடெல்லி வருகிறார்.

அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர் நிலைக்குழுவும் வருகிறது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் துருக்கி பிரதமர் ஆலோசனை நடத்த இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

துருக்கி பிரதமருக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார்.

வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரையும் சந்திக்க உள்ள துருக்கி பிரதமர், ஆக்ராவிற்கும், பெங்களூருவிற்கும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார்.
About Writer
Webdunia