1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay's Trichy Speech Rattles Opponents as He Quietly Focuses on Governance at Secretariat

20 நிமிடம் பேசிவிட்டு வேலையை பார்க்கிறார் முதல்வர் விஜய்.. 20 நாள் அவரது பேச்சை பற்றி கதறுகிறார்கள் மற்றவர்கள்...

முதலமைச்சர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் திருச்சியில் ஆற்றிய அதிரடி உரை, ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளதுடன், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே நேரத்தில் கதற விட்டிருக்கிறது என்பது தற்போதைய சூழலில் மிகத் தெளிவாகப் புரிகிறது.
 
ஒரு பக்கம், ஆளுங்கட்சியான திமுகவில் மூத்த தலைவர் ஆ. ராசாவை தொடர்ந்து, இன்றைய தினம் செந்தில் பாலாஜி வரை விஜய்யின் திருச்சி பேச்சை விமர்சித்து அறிக்கை மற்றும் பேட்டிகளை அளித்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் எழிலனும் தன் பங்கிற்கு விமர்சன கணைகளை தொடுத்துள்ளார். 
 
இன்னொரு பக்கம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் கே.பி. முனுசாமி மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரும் இதே ஃபார்முலாவை பயன்படுத்தி விஜய்யை தாக்கி பேசி வருகின்றனர். இதுமட்டுமன்றி, பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரும் தங்களின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சோசியல் மீடியாவில் சாட்டை துரைமுருகன் மற்றும் கார்த்தி கோபிநாத் ஆகியோர் 24/7 கணக்கில் முழு நேர வேலையாகவே விஜய்யை ட்ரோல் செய்து விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
இப்படி அனைத்து பக்கங்களில் இருந்தும் தமக்கு எதிராக வரும் அரசியல் தாக்குதல்கள், விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் அனைத்தையும் தன் மௌனத்தாலும், திருச்சி மேடை பேச்சாலும் திறம்பட முறியடித்துவிட்டு, முதலமைச்சர் விஜய் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் கோட்டைக்கு சென்று தலைமை செயலகத்தில் தன்னுடைய மக்கள் பணிகளை மிக சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய முதிர்ச்சியான அணுகுமுறையே அவரை ஒரு தனித்துவமான தலைவராகக் காட்டுகிறது.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
ஒருசில ஹார்ட் டிஸ்க்குகளை திருடி எடுத்துவிட்டால் தப்பித்துவிட முடியுமா? அமைச்சர் சிடி நிர்மல்குமார்