1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. "No One Can Escape": Minister CTR Nirmalkumar Warns After Hard Disks Go Missing at TNEB Headquarters

ஒருசில ஹார்ட் டிஸ்க்குகளை திருடி எடுத்துவிட்டால் தப்பித்துவிட முடியுமா? அமைச்சர் சிடி நிர்மல்குமார்

nirmal kumar
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல் விபரங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
 
அவரது பேட்டியில், "ஒருசில ஹார்ட் டிஸ்க்குகளை திருடி எடுத்துவிட்டால் தங்களின் ஊழல்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் தப்பித்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர்; ஆனால், அப்படியெல்லாம் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது" என்று மிக ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் மின்வாரியத்தின் தரவுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, அதன் நகல்கள் பாதுகாப்பான சர்வர்களில் சேமிக்கப்பட்டுள்ளதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆவணங்களை அழிக்கும் நோக்கில் இந்த திட்டமிட்ட சதி அரங்கேறியுள்ளதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்துச் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
ஹார்டு டிஸ்க்குகளைத் திருடிய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
 
Editd by Siva
About Writer
Webdunia