அகமதாபாத்: டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக குஜராத்தின் சனந் தாலுக்காவில் உள்ள விவசாய நிலங்களை அம்மாநில அரசு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரிய கிஷான்-தல் என்ற அமைப்பு அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளது.