1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சு‌ர்‌ஜி‌த் ‌மீ‌ண்டு‌ம் கவலை‌க்‌கிட‌ம்!

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த்
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த் கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளா‌ர்.

சுவாச‌க் கோளா‌று காரணமான ‌தீ‌விர ‌‌‌சி‌கி‌ச்சை‌ப் ‌பி‌ரி‌வி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள சு‌ர்‌ஜி‌த்‌தி‌ற்கு செய‌ற்கை‌ச் சுவாச‌ம் அ‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வருவதாகவு‌ம், அவரது ‌நிலையை மரு‌த்துவ‌ர்க‌ள் ‌தீ‌விரமாக‌க் க‌ண்கா‌ணி‌த்து வருவதாகவு‌ம் இதய ‌சி‌கி‌ச்சை மரு‌த்துவ‌ர் புருஷோ‌த்த‌ம் லா‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ற்போது 92 வயதாகு‌ம் சு‌ர்‌ஜி‌த், உட‌ல் நல‌க்குறைவு காரணமாக கட‌ந்த ஜூ‌ன் மாத‌ம் 7 ஆ‌ம் தே‌தி மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அ‌ப்போது கோமா ‌நிலை‌யை அடை‌ந்த சு‌ர்‌ஜி‌த்‌தி‌ற்கு ‌சி‌றிது ‌சி‌றிதாக ‌நினைவு ‌திரு‌ம்‌பியதை அடு‌த்து ‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌‌ட்டா‌ர்.