இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி முடிவெடுத்திருப்பதற்கு, அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய தேச முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேச லோக் தள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேச லோக் தள் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை லோக் தள் கடுமையாக எதிர்க்கிறது என்றும், அந்த...