ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக நடந்த கடும் மோதலில், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும், இதில் 11 தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாகவும் ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.