அமர்நாத் செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்காக அக்கோயில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து காஷ்மீரில் நடந்த போராட்டத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் துவங்கியது.ஜம்மு-ஸ்ரீநகர் தேச நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் பாறை மற்றும் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்த நிலையிலும் அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியுள்ளது.1,034 பெண்கள், 193 சிறுவர்கள் உட்பட 4,105 யாத்திரிகர்கள் பகவதி நகர் முகாமிலிருந்து 89 பேருந்துகள் உட்பட 126 வாகனங்களில்...