1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கண் அறுவை சிகிச்சை!

பிரதமர் மன்மோகன் சிங் அறுவை சிகிச்சை கண் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை டெல்லி
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை இ‌ன்று நடந்தது.

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது கண்ணில் லென்‌ஸ் பொருத்தப்பட்டது.

அவர் இன்று மாலையே வீடு திரும்பி விடுவார் என்றும், நாளை முதல் தனது வழக்கமான அலுவல்களை தொடங்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அரசு செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 வயதாகும் மன்மோகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இதேபோன்று அவரது வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.