1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க்கொலை!

ஆ‌ந்‌திரா ந‌க்சலை‌ட் ‌பிரஜா ‌பிர‌திகதனா
ஆ‌ந்‌திரா‌வி‌ல் காவ‌ல்துறை‌யினருட‌ன் நட‌ந்த மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வார‌ங்க‌ல் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள கொடிசாலா வன‌ப்பகு‌தி‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை காவ‌ல்துறை‌யினருட‌ன் நட‌ந்த மோத‌லி‌ல் ‌பிரஜா ‌பிர‌திகதனா குழுவை‌ச் சே‌ர்‌ந்த 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வழ‌க்கமான தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ன் போது 16 ந‌க்சலை‌ட்டுகளை‌ச் சு‌ற்‌றி வளை‌த்ததாகவு‌ம், அவ‌ர்களை‌ச் சரணடைய‌‌க்கூ‌றி வ‌ற்புறு‌த்‌தியபோது மோத‌ல் வெடி‌த்ததாகவு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்து‌க் காவ‌ல்துறை‌யின‌் நட‌த்‌திய எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம் ம‌ற்றவ‌ர்க‌ள் த‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌ம் அ‌திகா‌ரிக‌ள் கூ‌றின‌ர்.

மோத‌ல் நட‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌ந்து கை‌த்து‌ப்பா‌க்‌கிக‌ள், வெடிபொரு‌ட்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட பய‌ங்கர ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.