1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டெ‌ல்‌லி‌யி‌ல் தொட‌ர்‌ந்து கடு‌ம் மழை!

டெ‌ல்‌லி‌ மழை
தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மூ‌ன்றாவது நாளாக‌க் கடு‌ம் மழை பெ‌‌ய்து வரு‌கிறது.

வட இ‌ந்‌தியா முழுவது‌ம் வழ‌க்க‌த்‌தி‌ற்கு மாறான வா‌னிலை ‌நில‌வி வரு‌கிறது. வழ‌க்கமாக கோடை வெ‌‌யி‌ல் த‌கி‌க்கு‌ம் இட‌ங்‌க‌ளி‌ல் ‌மிதமான வெ‌ப்பமு‌ம், மழையு‌ம் பெ‌‌ய்து வரு‌கிறது.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக‌‌ப் பெ‌ய்து வ‌ந்த கனமழை மூ‌ன்றாவது நாளாக இ‌ன்று‌ம் தொட‌ர்‌ந்தது. இதனா‌ல் வெ‌ப்ப‌ம் குறை‌ந்து‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌ல் தொட‌ர்‌ந்து இடியுட‌ன் கூடிய பல‌த்த கா‌ற்று ‌வீசு‌‌ம் எ‌ன்று‌ம், இதே‌நிலை மேலு‌ம் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.