1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சு‌ர்‌ஜி‌த் உட‌ல் ‌நிலை : பிரத‌ம‌ர் ‌நே‌ரி‌ல் ‌விசா‌ரி‌ப்பு!

ஹர்கிஷன் சிங் சு‌ர்‌ஜி‌த் பிரதமர் மன்மோகன்சிங் நொய்டா
கோமா ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சு‌ர்‌ஜி‌த்தை இ‌ன்று பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனைக்கு சென்று ச‌ந்‌தி‌த்து உட‌ல் ‌நிலை ப‌ற்‌றி ‌விசா‌ரி‌த்தா‌ர்.

மூ‌‌ச்சு‌த் ‌திணற‌ல் காரணமாக கட‌ந்த 6ஆ‌ம் தே‌தி ஹர்கிஷன் சிங் சுர்ஜித், நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை தொட‌ர்‌‌ந்து கோமா ‌நிலை‌க்கு செ‌ன்றா‌ர்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மரு‌த்துவ‌ர் புருஷோத்தம்லால் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று, ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து மரு‌த்துவ‌ர்க‌ளிட‌ம் விசாரித்தார்.