1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

குர்கா‌னி‌ல் சுவ‌ர் ‌விழு‌ந்து 17 பே‌ர் ப‌லி!

குர்கான் கூலி தொழிலாளர்கள் அ‌ரியானா
அ‌ரியானா மா‌நில‌ம் குர்கான் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர்கள் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அ‌ரியானா மா‌நில‌ம் குர்கானில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் அந்த சுவரை ஒட்டி தற்காலிக குடிசைகள் அமைத்து தங்கியிருந்த கூலித் தொழிலாளர்கள் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ‌நிக‌ழ்வு குறித்து கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனத்தின் மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.