1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காஷ்மீர் தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதி 3 தீவிரவாதிகள்
ஜம்மு காஷ்மீர் மானிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தலை நகர் ஸ்ரீநகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள லுர்காம்-த்ரால் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவ உதவியுடன் காவல்துறை அங்கு விரைந்தது.

அங்கு ஒரு வீட்டினுள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவத்தினர் திருப்பி சுட்டதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை கூறுகிறது.
About Writer
Webdunia