1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பாக். மீனவர்கள் 14 பேர் விடுதலை!

பாகிஸ்தான் மீனவர்கள் குஜராத் அரசு வாகா எல்லை வதோதரா
இந்தியக் கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் 14 பேரை குஜராத் அரசு விடுதலை செய்தது.

இவர்கள் வாகா எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தங்கள் நாட்டிற்கு செல்வார்கள்.

கட்ச் மாவட்டத்தில் பூஜ் சிறையில் அடைக்கப்பட்ட 8 பாகிஸ்தான் மீனவர்களையும் வதோதரா சிறையில் அடைக்கப்பட்ட 6 மீனவர்களையும் விடுதலை செய்துள்ளதாக ஜாம்நகர் காவல்துறை உயரதிகாரி பியூஷ் படேல் தெரிவித்தார்.

இதற்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு சிறைகளில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 512 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய மீனவர்கள் சங்க தலைவர் வேல்ஜிபாய் மஸானி தெரிவித்துள்ளார்.
About Writer
Webdunia