1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் மோத‌ல்: ல‌ஷ்க‌‌ர் ‌தீ‌விரவா‌திக‌ள் இருவ‌ர் ப‌லி!

ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா தோடா ஃப‌ர்க‌த் ஹ‌ூசை‌ன்
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினருட‌ன் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா இய‌க்க‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் இருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

தோடா மாவ‌ட்ட‌ம் க‌ண்டோ பகு‌தி‌யி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் பது‌ங்‌கிரு‌ப்பதாக‌க் ‌கிடை‌த்த தகவ‌‌லி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் தேடுத‌ல் வே‌ட்டை நட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது அ‌ங்கு பது‌ங்‌கி‌யிரு‌ந்த ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் வெடி‌த்தது. இ‌தி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். ஒருவ‌ன் ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா இய‌க்க‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த் தளப‌தி ஃப‌ர்க‌த் ஹ‌ூசை‌ன் எ‌ன்ற மோ‌ச்‌சி எ‌ன்று‌ம் ம‌ற்றொருவ‌ன் பா‌கி‌ஸ்தானை‌ச் சே‌ர்‌ந்த அபு ராஜா எ‌ன்று‌ம் தெ‌ரியவ‌ந்தது.

கொ‌ல்ல‌ப்ப‌ட்ட இர‌ண்டு ‌தீ‌விரவா‌திக‌ளிட‌‌ம் இரு‌ந்து‌ம் ஏராளமான வெடிபொரு‌ட்களு‌ம் ஆயுத‌ங்களு‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

அ‌ண்மை‌யி‌ல் ச‌ம்பா எ‌ல்லை‌யி‌ல் ஊடுரு‌விய ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா இய‌க்க‌த்‌தி‌ன் ம‌‌ற்றொரு துணை அமை‌ப்பான அ‌ல்- மெரா‌ன் இய‌க்க‌த் ‌தீ‌விரவா‌திகளை வரவே‌ற்று அழை‌த்துவர‌ச் செ‌ன்றவ‌ர்க‌ள்தா‌ன் இவ‌ர்க‌ள் இருவரு‌ம் எ‌ன்று பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.