1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை த‌ள்‌‌ளிவை‌ப்பு!

புதுச்சேரி சட்ட‌ப்பேரவை‌ ஆளுந‌ர் ஜோகிந்தர் சிங் ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி சட்ட‌ப்பேரவை‌யி‌ன் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மறுதே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் த‌ள்‌ளிவைக்கப்பட்டது.

புதுச்சேரி சட்ட‌ப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி ஆளுந‌ர் ஜோகிந்தர் சிங் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 27ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி 2008-09ஆ‌ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மொத்தம் 23 அமர்வுகள் நடைபெற்ற நிலையில் புதுச்சேரி ச‌ட்ட‌ப்பேரவை கூட்டம் மறு தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் ஒத்திவைக்கப்படுவதாக அவை‌த் தலைவ‌ர் ராதாகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.