1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி ப‌லி!

ஜ‌ம்மு ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் ‌தீ‌விரவா‌தி அபு ஹ‌க் ஜஹா‌ங்‌கி‌ர்
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினருட‌ன் நட‌ந்த மோத‌லி‌ல் ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் இய‌க்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

‌ரியா‌சி மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌லிய‌ன் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று அ‌‌திகாலை உ‌ள்ளூ‌ர் காவ‌ல்துறை‌யினரு‌ம் ராணுவ‌த்‌தினரு‌ம் இணை‌ந்து மே‌ற்கொ‌ண்ட தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ன் போது அவ‌‌ர்களு‌‌க்கு‌ம் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் மோத‌ல் வெடி‌த்தது.

இ‌தி‌ல் ஹ‌ி‌‌ஸ்பு‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் இய‌க்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌தி அபு ஹ‌க் எ‌ன்ற ஜஹா‌ங்‌கி‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். இவ‌னிட‌‌மிரு‌ந்து ஏ.கே.47 து‌ப்பா‌க்‌கி, வெடி பொரு‌ட்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

இவ‌ன் ப‌ல்வேறு கொலை, கட‌த்த‌ல் ச‌ம்பவ‌‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கட‌ந்த 1993 அ‌ம் ஆ‌ண்டு பாதுகா‌ப்பு‌ப் ப‌டை‌யின‌ர் ‌மீது நட‌ந்த தா‌க்குத‌ல் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றி‌ல் தொட‌ர்புடையவ‌ன்.

கட‌ந்த 2003 ஆ‌ம் ஆ‌‌ண்டு ‌பிரா‌ன்கோ‌ட் படுகொலை என‌ப்படு‌ம் 21 இ‌ந்து‌க்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ச‌ம்பவ‌‌த்‌திலு‌ம் ஜஹா‌ங்‌கிரு‌க்கு‌த் தொட‌ர்பு உ‌ள்ளது.