தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி அமைப்பினருக்கு லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று இது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இதனை தெரிவித்தார்.2006 ஆம் ஆண்டு முதல் சிமி இயக்கத்தை சேர்ந்த 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மத்தியப் பிரதேசத்திலிருந்து மட்டும் 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர்,...