மத்தியப் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பரவியிருக்கும் சிமி இயக்கத்தினரைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குனா நகரத்திற்கு அருகில் உள்ள சச்சோரா நகரத்தில் சிமி இயக்கத்தினர் ரகசியக் கூட்டம் நடத்தி வருவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த...