1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கொல்கத்தா: பேரு‌ந்து கவிழ்ந்ததில் 20 பேர் பலி!

கொல்கத்தா வடக்கு பர்கானஸ் பாபுகாட்
மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

"கொல்கத்தாவின் பாபுகாடபகுதியில் இருந்து நாராயன்பூருக்கு செல்லும் வழியில் ஆட்டோவுடன் ஏற்படும் விபத்தை தவிர்ப்பதற்காக பேருந்து ஓட்டுனர் முயற்சித்தபோது, கால்வாயில் கவிழ்ந்துள்ளது" என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீரில் மூழ்கி இறந்த மூன்று பேரின் உடலை எல்லைப் பாதுகாப்பு படை மீட்டுள்ளது. மேலும், பலரின் உடல்க‌ள் ‌நீ‌ரி‌ல் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதி மக்களு‌ம், காவல்துறையினரு‌ம் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதில் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நீரில் மூழ்கிய பேருந்து இரண்டு கிரேன்கள் மூலம் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
About Writer
Webdunia