நாகாலாந்து சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள நாகாலாந்து மக்கள் முன்னணி தலைமையில் கூட்டணி அரசு அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட இம்மாநிலச் சட்டப் பேரவைக்கு கடந்த 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 6,64,604 வாக்காளர்களில் 85 விழுக்காட்டினர் வாக்களித்தனர். இதில் 57 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்தது. காங்கிரஸ் கட்சி 22...