1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சூர‌த் ர‌‌யி‌ல் ‌விப‌த்‌தி‌ல் 16 பே‌ர் ப‌லி!

குஜராத் சூரத் உதன்னா
குஜராத் மாநிலம் சூரத் அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான அனைவரும் உத்திரபிரதேச மாநிலம் மாணிக்பூரை சேர்ந்தவர்கள்.

இ‌ந்த ‌விப‌த்துப‌ற்‌றி ர‌யி‌ல்வே அ‌திகா‌ரிக‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், "சூரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உதனா என்ற இடத்தில் நேற்று இரவு 11 மணிக்கு இந்த ரயில் விபத்து நடந்தது. இதில் 14 பேர் இறந்து விட்டனர். பலியான அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் மாணிக்பூரை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இறந்தவர்கள் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இன்னும் இரண்டு சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது" எ‌ன்றன‌ர்.