1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அ‌திகா‌ரிக‌ள் இடமா‌ற்ற வழ‌க்கு : த‌மிழக அரசு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

அ‌திகா‌ரிக‌ள் இடமா‌ற்ற வழ‌க்கு த‌மிழக அரசு‌ உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்
தே‌ர்த‌ல் நேர‌த்‌தி‌ல் அ‌திகா‌ரிக‌ளை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் இட‌ம்மா‌ற்ற‌ம் செ‌ய்வது தொட‌ர்பாக செ‌ன்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு தொட‌ர்‌ந்த வழ‌க்கு தொட‌ர்பாக நா‌ன்கு வார கால‌த்‌தி‌ற்கு‌ள் ப‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய த‌மிழக அரசு‌க்கு உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

கட‌‌ந்த 2006 ஆ‌ம் ஆ‌ண்டு நடை‌ப்பெ‌ற்ற த‌‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்தலையொ‌ட்டி அ‌ப்போதைய செ‌ன்னை மாநகர காவ‌ல் துறை ஆணையாள‌ர் நடராஜை பணிமா‌ற்ற‌ம் செ‌ய்ய த‌மிழக அரசு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டது. தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌‌தி‌ன் இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ‌விசா‌ரி‌த்த செ‌ன்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌‌ம் அ‌ந்த உ‌த்தரவை ‌நிறு‌த்‌தி வை‌த்தது.

தே‌ர்த‌ல் ஆணைய‌ம் தே‌ர்த‌ல் அ‌றி‌வி‌க்கையை வெ‌ளி‌யி‌ட்ட ‌பி‌ன்ன‌ர்தா‌ன் அ‌திகா‌ரிகளை இட‌ம் மா‌ற்ற‌ம் செ‌ய்ய உ‌த்தரவுக‌ள் ‌பிற‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன்று‌ம், தே‌ர்த‌ல் நடைபெறு‌ம் நா‌ட்க‌ள் தொட‌ர்பான அ‌றி‌வி‌ப்பு ‌வெ‌‌ளியான நா‌ள் தொட‌ங்‌கி அ‌திகா‌ரிகளை மா‌ற்ற உ‌த்தர‌விட முடியாது எ‌ன்று‌ம் த‌‌மிழக அரசு‌த் தர‌ப்‌பி‌ல் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டது.

த‌மிழக அரசு தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ‌விசாரணை‌க்கு ஏ‌‌ற்று‌க் கொ‌ண்ட உய‌ர்‌நீ‌‌திம‌ன்ற‌ம் தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ன் உ‌த்தரவை ‌நிறு‌த்‌தி வை‌க்க உ‌த்தர‌வி‌ட்டதா‌ல், இ‌ந்நா‌ள் வரை தே‌ர்த‌ல் ஆணைய‌த்தா‌ல் எ‌ந்த ஒரு அ‌திகா‌ரியையு‌ம் இட‌ம்மா‌ற்ற‌ம் செ‌ய்ய உ‌த்தர‌விட முடிய‌வி‌ல்லை.

இதனையடு‌த்து இ‌ந்‌திய தே‌ர்த‌ல் ஆணைய‌ம் செ‌ன்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச நீ‌திம‌‌ன்ற‌த்தை அணு‌கியு‌ள்ளது. இ‌வ்வழ‌‌க்கை ‌விசா‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ள் ஆ‌ர்.‌‌வீ. இர‌வி‌ந்‌திர‌ன், லோகே‌ஷ்வ‌ர் ‌சி‌ங் பா‌ண்டா ஆ‌கியோ‌ர் அட‌ங்‌கிய அம‌ர்வு இது‌த் தொட‌ர்பாக 4 வார‌த்‌தி‌ற்கு‌ள் ப‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்யுமாறு த‌‌மிழக அரசு‌க்கு‌த் தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌‌த்தர‌வி‌ட்டதோடு, வழ‌க்கு ‌விசாரணையையு‌ம் ஒ‌த்‌தி வை‌த்தன‌ர்.