1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அ‌ன்பும‌ணி‌யி‌ன் வே‌ண்டுகோளை ‌நிராக‌ரி‌த்தா‌ர் ஷாரூ‌க்கா‌ன்!

அ‌‌ன்பும‌ணி ராமதா‌ஸ் ஷாரூ‌க்கா‌ன்‌ திரை‌ப்பட‌‌ம் புகை ‌பிடி‌க்கு‌ம் கா‌ட்‌சி ரஜினிகாந்த் விஜய் அமிதாப்பச்சன்
திரை‌ப்பட‌ங்க‌ளி‌ல் புகை ‌பிடி‌க்கு‌ம் கா‌ட்‌சி‌யி‌ல் நடி‌ப்பதை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் அ‌‌ன்பும‌ணி ராமதா‌ஸ் ‌விடு‌த்த வே‌ண்டுகோளை இ‌ந்‌தி நடிக‌ர் ஷாரூ‌க்கா‌ன்‌ ‌‌நிராக‌ரி‌த்ததுட‌ன், ‌திரை‌‌த் துறை‌யினரு‌க்கு‌ப் படை‌ப்பு‌‌ச் சுத‌ந்‌திர‌ம் உ‌ள்ளதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌சி.எ‌ன்.எ‌ன். ஐ.‌பி.எ‌ன். ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பே‌சிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி, தனது வே‌ண்டுகோளை ஏ‌ற்று நடிகர் ரஜினிகாந்த், ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ல் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை கைவிட்டுள்ளதாகவு‌ம், இனிமேல் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் அறிவித்து‌ள்ளதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்துட‌ன், இ‌ந்‌தி ந‌ட்ச‌த்‌திர‌ங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோரும் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை கைவிட வேண்டும் எ‌ன்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இந்த கோரிக்கையை ஷாருக்கான் நிராகரித்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகை‌‌யி‌ல், "அன்புமணி சொல்வது சரிதான். ஆனால் ‌திரை‌ப்பட‌ம் என்பது எல்லாவற்றையும் நம்ப வைப்பது போல இருக்க வேண்டும். ‌திரை‌த்துறையினருக்கு படைப்புச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" எ‌ன்றா‌ர்.