1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

தொ‌ழி‌ற்சாலை ‌விப‌த்துகளை‌த் தடு‌க்க நடவடி‌க்கை!

தொ‌ழிலாள‌ர் ‌பி‌ரிய ர‌ஞ்ச‌ன் தா‌ஸ்மு‌ன்‌ஷி அமை‌ச்ச‌‌ர் பாதுகா‌ப்பு
நமது நா‌ட்டி‌ல் உ‌ள்ள தொ‌ழி‌‌ற்சாலைக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌தி‌ர்பாராத ‌விப‌த்துகளையு‌ம், அதனா‌ல் தொ‌ழிலாள‌ர்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் இழ‌ப்புகளையு‌ம் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பு‌திய ‌தி‌ட்ட‌ம் ஒ‌ன்று‌க்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை அனும‌திய‌ளி‌த்து‌ள்ளது.

ச‌ர்வதேச‌த் தொ‌ழிலாள‌ர் நல ‌வி‌திக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன்படி, தே‌சிய அள‌விலான கொ‌ள்கைக‌ளை உருவா‌க்‌கி அம‌ல்படு‌த்தவு‌ம், அத‌ன்மூல‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய தொ‌ழி‌ற்சாலை ‌விப‌த்துகளை‌த் தடு‌க்கவு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்.

மேலு‌ம், ஆப‌த்‌து‌ மிகு‌ந்த தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கான பாதுகா‌ப்பு ‌வி‌திகளை இ‌ன்னு‌ம் கடுமையா‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று, இ‌ன்று நட‌ந்த அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த நாடாளும‌ன்ற ‌விவாகர‌த் துறை அமை‌ச்ச‌‌ர் ‌பி‌ரிய ர‌ஞ்ச‌ன் தா‌ஸ்மு‌ன்‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.