1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌பி‌ல்‌கி‌ஸ் பானு க‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்கு: 11 பேரு‌க்கு ஆயு‌ள்!

கோத்ரா ரயில் எ‌ரி‌ப்பு குஜராத் பில்கிஸ் பானு 11 பேரு‌க்கு ஆயு‌ள் த‌ண்டனை மும்பை சிறப்பு நீதிமன்றம்
கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட கலவரத்தின்போது வன்முறையாளர்களால் கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரு‌க்கு ஆயு‌ள் த‌ண்டனை ‌வி‌தி‌த்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

‌பி‌ல்‌கி‌ஸ் பானு க‌ற்ப‌‌ழி‌ப்பு வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி இன்று த‌ண்டனை ‌விவர‌ங்களை அ‌றி‌வி‌த்தா‌ர்.

இந்திய தண்டனைவியல் சட்டம் 302 (கொலை), 120 பி (சதித் திட்டம்), 149 (குற்றம் செய்யும் நோக்குடன் ஒன்று கூடியது), 376 (2) (இ) (ஜி) (கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்தல்) ஆகிய குற்றங்கள் புரிந்தது நிரூபிக்கப்பட்ட, ஜஸ்வந்திபாய் நை, கோவிந்த்பாய் நை, சைலேஷ் பட், ராதீஷாம் ஷா, பிபின் ஜோஷி, கேசர்பாய் கோகானியா, பிரதீப் மோர்தியா, பாஹாபாய் வோஹானியா, ராஜன்பாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆ‌கிய 11 பேரு‌‌ம் ஆயு‌ள் த‌ண்டனை பெ‌ற்றன‌ர்.

இ‌வ்வழ‌க்‌கி‌ல், மே‌ற்க‌ண்ட 11 பேரையு‌ம் பாதுகா‌த்தத‌ற்காக 12வது கு‌ற்றவா‌ளியாக சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு, கு‌ற்ற‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்ட காவ‌ல் அ‌திகா‌ரி சோமாபா‌‌ய் கோ‌ரி‌க்கு 3 ஆ‌ண்டு கடு‌ங்காவ‌ல் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி விரைவு ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் போது தனது குடும்பத்தினர் 16 பேருடன் சபர்வாத் என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி பில்கி‌ஸ் பானு குடும்பத்தினர் பயணம் செய்தபோது வன்முறையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.

அப்பொழுது 6 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு வன்முறையாளர்களால் கற்பழிக்கப்பட்டார். பானுவும், அவருடைய 2 குழந்தைகள் மட்டுமே உயிர் தப்பினர். மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கு குஜராத்தில் நடைபெற்ற போது பில்கிஸ் பானு மிரட்டப்பட்டா‌ர். இதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மும்பைக்கு மாற்றப்பட்டது. வழக்கு குறித்த புலனாய்வை மத்திய புலனாய்வுக் கழகம் மேற்கொண்டது.

இவ்வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி கட‌ந்த 18 ஆ‌ம் தே‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். பில்கி‌ஸ் பானுவை கற்பழித்தது, அவருடைய குடும்பத்தினரை கொலை செய்தது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 12 பேரை குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.