1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அமிர்‌த்ச‌ர் எக்ஸ்புரஸ் தடம் புரண்டது!

மே‌ற்கு வ‌ங்க‌ ம‌ா‌நில‌‌ம் திப்ருகார்-அமிர்த்சர் எக்ஸ்பிரஸ் பெட்டிகள்
மே‌ற்கு வ‌ங்க‌ ம‌ா‌நில‌‌ம் திப்ருகார்-அமிர்த்சர் எக்ஸ்பிரஸ் இரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் இன்று தடம்புரண்டன.

திப்ருகார்-அமிர்த்சர் எக்ஸ்பிரஸ் இரயில் (எ‌ண் 5933) காலை 6.23 மணிக்கு நியு ஜல்பைகுரியில் இரயில் நிலையத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஆலுபாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இரண்டு பொது வகுப்பு பெட்டிகள் உட்பட இரயிலின் இறுதி மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.

"இந்த விபத்தில் அதி‌ர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகளை மீட்க கிரேன் அனுப்பப்பட்டுள்ளது" என்று இரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் ரவா தெரிவித்தார்.