1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அ‌‌க்‌னி-3+ ஏவுகணை 2009 இ‌ல் ஏவ‌ப்படு‌ம்!

அ‌‌க்‌னி-3+ ஏவுகணை பாதுகா‌ப்பு ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌‌‌ம் மே‌ம்பா‌ட்டு கழக‌‌ம் ‌வி.கே.சர‌ஸ்வ‌த்
அ‌திகப‌ட்சமாக 5,000 ‌கிலோ ‌மீ‌ட்டரு‌க்கு‌ம் அ‌திகமான தொலை‌வி‌ல் உ‌ள்ள இல‌க்குகளை‌த் தா‌க்கவ‌ல்ல நீண்ட தூர அ‌க்‌னி-3+ ஏவுகணை அடு‌த்த ஆ‌ண்டு துவ‌க்க‌த்‌தி‌ல் சோதனை செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளது.

த‌ற்போது இ‌ந்த ஏவுகணை வடிவமை‌ப்பு ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளது எ‌ன்று பாதுகா‌ப்பு ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌‌‌ம் மே‌ம்பா‌ட்டு கழக‌த்‌தி‌ன் முத‌ன்மை இய‌க்குந‌ர் ‌வி.கே.சர‌ஸ்வ‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுகு‌றி‌த்து இ‌ன்று அவ‌ர் ‌விசாக‌ப்ப‌ட்டண‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், "நமது அடு‌த்த இல‌க்கான அ‌க்‌னி-3+ ஏவுகணை தயா‌ரி‌ப்பு முய‌ற்‌சிக‌ள் வெ‌‌ற்‌றிகரமாக மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. த‌ற்போது வடிவமை‌ப்பு‌ப் ப‌ணிக‌ள் நட‌ந்து வரு‌கி‌ன்றன.

அநேகமாக அடு‌த்த ஆ‌ண்டு தொட‌க்க‌த்‌தி‌ல் அ‌‌க்‌னி-3+ ஏவுகணை‌யி‌ன் முத‌ல்க‌ட்ட சோதனை நட‌த்த‌‌ப்படு‌ம். ‌ஒ‌ரிசா‌வி‌ல் உ‌ள்ள பாலசூர் ஒரு‌ங்‌கிணை‌ப்ப‌‌ட்ட ஏவு தள‌த்‌தி‌ல் நட‌க்கவு‌ள்ள இ‌ந்த‌ச் சோதனை ‌நி‌ச்சய‌ம் வெ‌ற்‌றிபெறு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ‌எ‌ல்லா பருவ ‌நிலை‌யிலு‌ம் செயலா‌ற்ற‌க் கூடிய பீர‌ங்‌கி எ‌தி‌ர்‌ப்பு ஏவுகணையான 'நா‌க்'‌ கி‌ன் வ‌ணிக‌ரீ‌தியான சோதனை வரு‌கிற மே மாத‌ம் ராஜ‌ஸ்தா‌ன் பாலைவன‌த்‌தி‌ல் நட‌க்க உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நா‌க் ஏவுகணை‌யி‌ன் வடிவமை‌ப்பு‌ப் ப‌ணிக‌ள் 1988 ஆ‌ம் ஆ‌ண்டு தொட‌ங்‌கின. இத‌ன் முத‌ல் சோதனை 1990 ஆ‌ம் ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் மாத‌ம் வெ‌ற்‌றிகரமாக நட‌த்த‌ப்ப‌ட்டது.