1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

குஜரா‌த்‌தி‌ல் 18 அமை‌ச்ச‌ர்க‌ள் பத‌‌வியே‌ற்பு !

குஜரா‌த்
குஜரா‌த்‌‌தி‌ல் இ‌ன்று பு‌திதாக 18 அமை‌ச்ச‌ர்க‌ள் பத‌வியே‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.

குஜரா‌த் ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பு‌திய அமை‌ச்ச‌ர்க‌ள் அனைவரு‌க்கு‌‌ம் அ‌ம்மா‌நில ஆளுந‌ர் நவ‌ல் ‌கிஷோ‌ர் ச‌ர்மா பத‌வி‌ப் ‌பிரமாண‌ம் செ‌‌ய்து வை‌த்தா‌ர்.

பு‌திய அமை‌ச்ச‌ர்க‌ளி‌ல் வ‌ஜூ வாலா, நரோ‌த்த‌ம் ப‌ட்டே‌ல், ஆன‌ந்‌தீப‌ன் ப‌ட்டே‌ல், அ‌மி‌த் ஷா, செளர‌ப் ப‌ட்டே‌ல், ரம‌ன்லா‌ல் வோரா, ம‌ன்குபா‌ய் ப‌ட்டே‌ல், ஜ‌ஸ்வ‌ந்‌த்‌சி‌ன் பபோ‌ர், புருஷோ‌த்த‌ம் சோல‌ங்‌கி ஆ‌கிய 9 பே‌ர் கே‌பின‌ட் அமை‌ச்ச‌ர்களாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மேலு‌ம், ‌நி‌தி‌ன் ப‌ட்டே‌ல், ‌தி‌லீ‌ப் ச‌ங்கா‌னி, ஃபா‌கி‌ர் வகேலா, ஜெயநாராய‌‌ண் ‌வியா‌‌ஸ், மாயா கொ‌ட்னா‌னி, ‌கி‌ரி‌ட்‌சி‌ன் ரானா, ப‌ர்பா‌ட் ப‌ட்டே‌ல், ஜே‌சி‌ன் செளகா‌ன், வாச‌ன் அஹ‌ி‌ர் ஆ‌கியோ‌ர் பு‌திய முக‌ங்களாவ‌ர்.

மு‌ன்னதாக கட‌ந்த மாத‌ம் 25 ஆ‌ம் தே‌தி நட‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ல் நரே‌ந்‌திர மோடி ம‌ட்டு‌ம் முத‌ல்வராக‌ப் பத‌வியே‌ற்று‌க் கொ‌ண்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.