1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புலனா‌ய்வு‌ச் செ‌ய்‌திகளு‌க்கு க‌ட்டு‌ப்பாடு: டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

தொலை‌க்கா‌ட்‌சி புலனா‌ய்வு‌ச் செ‌ய்‌தி ஒ‌ளிபர‌ப்பு நெ‌றிமுறை டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்
தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் புலனா‌ய்வு‌ச் செ‌ய்‌திகளை ஒ‌ளிபர‌ப்புவத‌ற்கு வ‌ழிகா‌ட்டு நெ‌றிமுறைகளை ஏ‌ற்படு‌த்த குழு அமை‌ப்பது கு‌றி‌த்து‌ப் ப‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய தகவ‌ல் ம‌ற்றும் ஒ‌ளிபர‌ப்பு அமை‌ச்சக‌த்து‌க்கு டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

அ‌ந்த‌க் குழு‌வி‌ல் ஓ‌ய்வுபெ‌ற்ற உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி தலைமை‌யி‌ல் 3 உறு‌ப்‌பின‌ர்க‌ள் இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், புலனா‌ய்‌வு‌ச் செ‌ய்‌திகளை ஒ‌ளிபர‌ப்புவத‌ற்கு மு‌ன்பு குழு‌விட‌ம் ஒ‌ப்புத‌ல் பெற வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதன் மூலம் போலியான செய்திகள், தேவைய‌ற்ற பரபர‌ப்பூ‌ட்டு‌ம் தகவல்கள் ஒளிபரப்புவது கட்டுப்படுத்தப்படும் என்றும் ‌நீ‌திம‌ன்ற‌ம் கூ‌றியு‌ள்ளது.