குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது. நண்பகல் வரை செளராஷ்டிரா பகுதியில் 25 விழுக்காடும், தெற்கு குஜராத்தில் 20 விழுக்காடும் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இன்று தேர்தல் நடக்கும் 87 தொகுதிகளில் செளராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதியில் 58 தொகுதிகளும், தெற்கு குஜராத்தில் 29 தொகுதிகளும் உள்ளன. முதல்கட்டத் தேர்தலுக்காக 19,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,834 சாவடிகள் பதற்றம்...