1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

எ‌ய்‌ம்‌ஸ் தலைவராக தோ‌க்ரா ‌நியமன‌ம்!

டெ‌ல்‌லி‌ எ‌ய்‌ம்‌ஸ் பு‌திய தலைவராக டி.டி.தோ‌க்ரா
புது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள அ‌கில இ‌ந்‌திய மரு‌த்துவ அ‌றி‌விய‌ல் கழக‌த்‌தி‌ன் (எ‌ய்‌ம்‌ஸ்) பு‌திய தலைவராக மரு‌த்துவ‌ர் டி.டி.தோ‌க்ராவை ம‌த்‌திய சுகாதார அமைச்சகம் ‌நிய‌மி‌த்துள்ளது.

எய்ம்ஸ் தலைவர் பதவிக்கான வயது வரம்பை 65 ஆக நிர்ணயித்து மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், 66 வயதான மருத்துவர் வேணுகோபாலை எய்ம்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கும் உத்தரவை மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்தது.

அவரு‌க்கு ப‌திலாக தடய அ‌றி‌விய‌ல் துறை தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் டி.டி.தோ‌க்ரா ஒரு மாத‌த்‌தி‌ற்கு எ‌ய்‌ம்‌ஸ் தலைவராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இ‌ம்மாத‌ம் 7 ஆ‌ம் தே‌தி எ‌ய்‌ம்‌ஸ் ‌நி‌ர்வா‌க‌க் குழு கூடி அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கையை முடிவு செ‌ய்யு‌ம்.