1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி, பலர் காயம்!

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் ஷெரீஃப் தர்காவிற்குள் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமுற்றனர்!

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, எல்லா மதத்தினரும் வருகை தரும் கவாஜா மொய்ன்-உத்-தீன் திஸ்தியின் கல்லறை அமைந்துள்ள தர்கா ஷெரீஃபில் இன்று மாலை 500க்கும் அதிகமானோர் தொழுகை செய்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததெனவும், அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அங்கு திரண்ட காவல் துறையினர், அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். இதனால் கோபமுற்ற பக்தர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் காவலர்கள் சிலர் காயமுற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.
About Writer
Webdunia