1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புதுவை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

புதுவை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
புதுவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன.

புதுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தவர் உயிரிழந்ததற்கு நீதி விசாரணை கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநில செயலாளர் நா.ரா. கலைநாதன் தலைமையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது மருத்துவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி, இன்று மருத்துவர்கள் ஒரு மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

புதுவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்லத்துரை என்பவர் மரணம் அடைந்ததற்கு டாக்டர் முருகேசன் தான் காரணம் என்று கூறி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது மருத்துவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். பிறகு, மருத்துவர்கள் புதுவை மாநில ஆளுநரை சந்தித்து, இந்த பிரச்சனையில் தலையிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தரக்குறைவாக பேசுவதை தடுத்து நிறுத்தும் படி மனு கொடுத்தனர்.