புதுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தவர் உயிரிழந்ததற்கு நீதி விசாரணை கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநில செயலாளர் நா.ரா. கலைநாதன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். புதுவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக செல்லத்துரை என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவருக்கு டாக்டர் முருகேசன் சிகிச்சை அளித்து வந்தார். செல்லத்துரைக்கு சீறுநீரகம் சிறிதளவு இயங்குவதால், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்கும் படி டாக்டர் முருகேசன் ஆலோசனை...