1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மும்பையில் கட்டடம் இடிந்து 21 பேர் பலி

மும்பையில் கட்டடம் இடிந்து 21 பேர் பலி
மும்பையில் நேற்று 6 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 21 பேர் பலியாயினர்.

மும்பையில் போரிவல்லி பகுதியில் லட்சுமி சாயா என்ற அடுக்குமாடி கட்டடம் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டடத்தில் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக உயர்ந்துள்ளது மேலும், பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி இருந்த 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
About Writer
Webdunia