1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கலாம் - 3ம் அணி நாளை சந்திப்பு!

கலாம் 3ம் அணி குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவித்துள்ள 3-ம் அணி கட்சித் தலைவர்களை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளை சந்தித்துப் பேசுகிறார்!

ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எனும் 3-ம் அணித் தலைவர்கள் தன்னை சந்தித்துப் பேச நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அப்துல் கலாம் நேரம் அளித்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை கூறியுள்ளது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் அமர் சிங், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம்பிரகாஷ் செளதாலா, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ ஆகியோர் நாளை கலாமை சந்தித்துப் பேசுகின்றனர்.