1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காஷ்மீரில் குண்டு வெடிப்பு : 6 பேர் காயம்!

ஜம்மு காஷ்மீர் குண்டு வெடிப்பு
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் மத்திய கூடுதல் காவல் படையின் முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு இலக்கு தவறி விழுந்து வெடித்ததில் அப்பாவிகள் 6 பேர் காயமுற்றனர்!

இத்தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கூடுதல் காவற் படையின் கட்டளை அதிகாரி கிர்ப்பால் சிங், முகாமை குறிவைத்துத்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், ஆனால் இலக்கு தவறி குண்டு வெடித்தது என்றும் கூறினார்.

காயமுற்ற 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன. (ஏ.என்.ஐ.)