இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: வடக்கில் த.தே.கூ. அமோக வெற்றி
இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 65 நகர சபைகளிலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணி 45 இடங்களைப் பிடித்துள்ளது.
ஆனால், போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் உள்ள 20 இடங்களில் 18 இடங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. மேலும் அம்பாறையில் 2 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
சிறிலங்க அரச படைகளின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்களின் மத்தியில் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகிறது என்று கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.